போதையில் சகோதரியை கொலை செய்த இலங்கையர்!

Report Print Murali Murali in சமூகம்

மது போதையில் தனது சகோதரியை கொலை செய்த இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்.தரகேஸ்வரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தாய் மற்றும் மகனுடன் சென்னை வலசர்வாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அவர் அங்குள்ள புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றி வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், இலங்கையில் வசிக்கும் குறித்த பெண்ணின் சகோதரர் குகதர்சன் சென்னைக்கு சென்றுள்ளார்.

சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாத்திரை முடிந்து சென்னையில் உள்ள தனது சகோரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மது அருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அவர், தனது சகோதரியுடன் இடம்பெற்ற வாக்குவாதத்தில் குறித்த பெண்ணை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார்.

அத்துடன் தனது தாய் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Latest Offers