இறுதி யுத்தத்தில் ஊனமுற்ற இரண்டு போராளிகளின் இன்றைய அவல நிலை

Report Print Banu in சமூகம்

இறுதி யுத்தத்தின் போது பல கொடூரமான நிகழ்வுகளையும், துயரங்களையும் தாங்கி நின்ற பூமியே இந்த புதுகுடியிருப்பு பகுதி.

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளற்ற நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி இருப்பதுடன், பல துயரங்களை அனுபவித்து கொண்டு தமது வாழ் நாளை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு புதுகுடியிருப்பு - மல்லிகைத்தீவு, பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான தினேஸ், கவிதா இறுதிப்போார் வரை களத்தில் நின்று போராடி தமது கால்களை இழந்து, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற நிலையில் அன்றாடம் தன் வாழ்வினை கழிக்க போராடி வருகின்றனர்.

மிகவும் துயரத்தின் மத்தியில் தமது அன்றாட வாழ்வை கழித்து வரும் இவர்களது வாழ்வில் நல் உள்ளங்கள் நினைத்தால் ஒளியேற்ற முடியும்.

அந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து செய்யும் உதவி அவர்களது வாழ்க்கையில் சிறந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

இவர்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ள காணொளி உங்கள் பார்வைக்காக,

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600