டிக்கோயாவில் பள்ளத்தில் வீழ்ந்து கனரக வாகனம் விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

டிக்கோயா நகரில் பள்ளத்தில் பாய்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா நகரை அண்மித்த வனராஜா பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரபத்தனையிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு இன்று இரவு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தை செலுத்திய சாரதி தலைமறைவாகியுள்ளதுடன் அதிக வேகமே விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers