செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூழ்கி சிறுவனொருவர் உயிரிழப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூழ்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் நீராடியுள்ளனர்.

இதன்போதே சடலம் மிப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.