சீனப் பயணிகளுக்கான ஒன் அரைவல் விசா தற்காலிகமாக நிறுத்தம்

Report Print Steephen Steephen in சமூகம்

சீனாவில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒன் அரைவல் விசா வழங்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் சீனாவில் வசிக்கும் பிரதேசத்தை கவனத்தில் கொண்டு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.