அக்கரப்பத்தனை - அல்டோரி தோட்டத்தில் தீ விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

அக்கரப்பத்தனை, அல்டோரி தோட்ட லயன் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் பூஜையறையில் இருந்த விளக்கின் மூலமாக தீ பரவியுள்ளதாக தெரியவருகின்றது.

அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி உட்பட உடமைகள் பலவும் சேதமாகியுள்ளன.