மட்டக்களப்பில் வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் என்பவர் மரணம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் எனும் 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒன்பது வருடங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் மட்டக்களப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.