ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்து வீட்டில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்ததுடன், சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...