உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Kumar in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.தியாகேஸ்வரன் முன்பாக இன்று காலை சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...