திருகோணமலையில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 40 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துறைமுக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்தநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மாசும்புர, குருணாகல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.

குருணாகலையிலிருந்து திருகோணமலை பகுதிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தொன்றில் பயணித்த சந்தேகநபர் நாற்பது மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இவரை, பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Latest Offers

loading...