குளத்தினை புனரமைத்து தருமாறு பொலன்னறுவை மக்கள் கோரிக்கை

Report Print Navoj in சமூகம்

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை, நவசேனபுர பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுடைய ஜீவனேபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெட்டப்பட்ட குளத்தினை தற்போதை ஜனாதிபதி அவரது ஆட்சிக் காலத்திலாவது புனரமைப்பு செய்ய முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

குளத்தினை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தும் 5050 குடும்பங்களின் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்கும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை மேலோங்கச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஜனாதிபதி ஆகியோர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தேர்தல் முடிந்ததும் எங்களை வந்து பார்ப்பது கிடையாது. எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது கிடையாது. நாங்கள் பெரும்பான்மை சமூகம் வாழும் பொலன்னறுவை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகம் வாழ்வதால் தங்களை கவனிக்காமல் உள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஒரு புரியாத புதிராக காணப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Latest Offers