மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை, சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 70 கிலோ வல்லப்பட்டையினையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வல்லப்பட்டை பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...