இலங்கையின் சுதந்திர நாளை துக்க நாளாக கடைப்பிடிக்குமாறு கோரிக்கை!

Report Print Yathu in சமூகம்

இலங்கையின் சுதந்திர நாளை துக்க நாளாக கடைப்பிடிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று பகல் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

போரின் போது இடம்பெற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஓமந்தையிலும் வட்டுவாகலிலும் இராணுவத்திடமே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம்.

அத்துடன் வவுனியா, மன்னாரில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள் எமது உறவுகள் காணாமல் போக செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதி அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர நாளை துக்க நாளாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரிய பேரணி ஒன்றை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில்முன்பாக ஆரம்பிக்கவுள்ளோம்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பேருந்து உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரண்டு உங்கள் ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...