எனக்கு உத்தரவிட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு உரிமையில்லை: சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in சமூகம்

அத்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ரியர் அத்மிரல் டி.கே.பி. தஸநாயக்க எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை நிறுத்துமாறு தனக்கு உத்தரவிடும் அதிகாரம் அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட ரீதியான உரிமையில்லை என சட்டமா அதிபர், அந்த ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

வசந்த காரன்னாகொட மற்றும் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோருக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை நிறுத்துமாறு ஆணைக்குழு, நேற்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

அரசியல் பழிவாங்கல் காரணமாக நீதிமன்றத்தில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கரன்னாகொட மற்றும் தஸநாயக்க, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை விசாரிப்பதற்கு முன்னதாக இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது முறைப்பாடு செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது.