சீனப் பெண் தங்கியிருந்த ஹொட்டல் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகம்

Report Print Kamel Kamel in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் தங்கியிருந்த ஹொட்டல் பணியாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் குறித்த ஹோட்டல் பணியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஹொட்டல் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியமைக்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்று தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பணியாளர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஹுன்கல்ல பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் குறித்த சீனப் பெண் தங்கியிருந்தார் எனவும் அந்த ஹோட்டலில் பணியாற்றிய பணியாளரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.