சீனாவின் 53 நகரங்களில் இருந்து தனிப்பட்டவர்கள் இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களில் உள்ளவர்கள் இலங்கைக்கு வர வேண்டுமெனில் அவர்கள் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும் என்று இலங்கையின் குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
சீனாவின் கியூபெக் மாகாணத்திலேயே கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தவிர ஏனைய மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் தாய்லாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பை கொண்டு வந்துள்ளது.