பூநகரி பகுதியில் மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் காடுகளை அழித்து பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி முழங்காவில் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கிளிநொச்சி நகர் பகுதிக்கு சிறு கனரக வாகனத்தில் மரம் கடத்துவதாக கிளிநொச்சி பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

அங்கு முதிரை மரக்குற்றிகள் மற்றும் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.