கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து கால போக நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கால போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கால போக நெல் கொள்வனவு தொடர்பில் இன்று பிற்பகல் மாவட்ட அரச அதிபரிடம் எமது செய்தியாளர் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை நோய்த்தாக்கம் என்பவற்றால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும்நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தனியார் நாளுக்கு நாள் குறைந்த விலைகளில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால் மேலும் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் கால போக நெல்லை அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை இன்றிலிருந்து தயாராகவுள்ளது, என்று அவர் தெரிவித்துள்ளார்.,