வயோதிப தாயுடனும், ஊனமுற்ற சகோதரியுடனும் இன்னல்களுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளி

Report Print Banu in சமூகம்

உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.

இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் புனர்வாழ்வு பெற்ற முல்லைத்தீவு, கேப்பாப்புலவைச்சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் வயோதிப தாயுடனும், ஊனமுற்ற சகோதரியுடனும் தன் அன்றாட வாழ்க்கையை பல இன்னல்களுக்கு மத்தியில் கொண்டு செல்கிறார்.

இவர் தனது ஆறா துயரங்களையும் கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற நிகழ்ச்சியினூடக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600