மது போதையில் வாகனம் ஒட்டிய பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

ஆண்கள் அணியும் ஆடை அணிந்து மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண்ணொருவருக்கு தம்புத்தேகம நீதவான் கே.ஏ.ரமீலா நதீஷானி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

நெலுவன்துடுவ ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான திருமணமாகாத பெண்ணுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் நீண்டகாலமாக மதுவுக்கு அடிமையாகியவர் என்பது பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலாவ பிரதேசத்தில் உள்ள நண்பியின் வீட்டுக்கு சென்று அங்கு சிலருடன் இணைந்து மது அருந்தி விட்டு, மீண்டும் ஹங்வெல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போது, கடந்த 23ஆம் திகதி இரவு 7.45 அளவில் தலாவ நகரில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த பெண் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது.

ஆண் உடையில் இருந்தால் பெண்ணின் வெளிதோற்றம் ஆணை போல் இருந்துள்ளது. இதனையடுத்து அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை பரிசோதித்த போது அவர் பெண் என்பது உறுதியாகியுள்ளதுடன், பின்னர் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அழைத்து பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.

தலாவ வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் பெண்ணை பரிசோதித்த போது, அவர் மது அருந்தி இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Latest Offers