யாழ்ப்பாண மாநகர முதல்வருடன் கனேடிய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

Report Print Sumi in சமூகம்

கனடா நாட்டின் டொரண்டோ மாகாணத்திற்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குமான உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டை கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது யாழ் நகரத்தில் பாரிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு டொரண்டோ மாகாணத்தின் வல்லுநர் ஒருவரை அனுப்புவதற்கு கனடிய உயர்ஸ்தானிகர் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான நிதிப் பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மாநகரத்தில் இனங்களுக்கிடையில் எவ்வாறான சமத்துவம் நிலவுகிறது என்பது தொடர்பிலும், தம்முடன் கனடிய நாட்டின் உயர்ஸ்தானிகர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் கேட்டுக்கொண்டதாகவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

இதேவேளை கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் டேவிட் மைகனன், நிறைவேற்று பணிப்பாளர் டேவிட் ஹாட்மன் ஆகியோர் யாழ்ப்பாண மாநகர முதல்வரை சந்தித்துள்ளனர்.

Latest Offers