சிறையிலிருந்த நிலையில் உயிர்நீத்த அரசியல் கைதி செ.மகேந்திரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி!

Report Print Dias Dias in சமூகம்

நீண்ட காலம் சிறையில் இருந்த நிலையில் உயிரிழந்த அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி சுவிற்சர்லாந்தில் பேர்ண் மாநிலத்தில் இடம்பெறவுள்ளது. அவரின் நண்பர்களால் நினைவஞ்சலிக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

செல்லப்பிள்ளை மகேந்திரன் 1974ம் ஆண்டு மட்டக்களப்பிலுள்ள மொறக்கொட்டாஞ்சேனை என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சில காலம் பயணித்தார்.

பின்னர் விலகி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு பல சித்திரவதைகளை அனுபவித்து 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

சிறையிலிருந்த போதே நோய்வாய்ப்பட்டு சாவையும் அணைத்துக் கொண்டார். செல்லப்பிள்ளை மகேந்திரன் தமிழ்ச் சமூகத்தால் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்.

இந்நிலையிலேயே, செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில், மனிதாபிமான ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers