யாழில் வீடொன்றிலிருந்து ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி பகுதியில் வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் எனவும், இவை சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...