கொரோனா மோசமானதல்ல! மருந்தை கண்டுபிடிக்கவே காலம் செல்லும்: பேராசிரியர் அறிவிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க நீண்டகாலம் செல்லும் என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அந்த வைரஸூக்கான சக்தி தொற்றுக்கு உள்ளானவரின் உடலில் இருந்தே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சார்ஸ் வைரஸை போன்று இந்த வைரஸ் மோசமானது அல்ல. சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 10 வீதமானவர்கள் உயிரிழந்ததாகவும், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் இலங்கைக்குள் இந்த வைரஸ் பரவுவதற்கான சாதகமான நிலைமைகள் இல்லை எனவும், சில நேரங்களில் மேலும் இரண்டு, மூன்று நோயாளிகள் கண்டறியப்படலாம் எனவும், அப்படி நடந்தால் இலங்கையில் இந்த வைரஸ் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அப்படியான அவதான நிலைமை ஏற்பட்டால் முகமூடிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மலித் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.