அம்பாறையில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம்

Report Print Varunan in சமூகம்

அம்பாறையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களினால் நிரந்திர நியமனம் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் ஒன்றுகூடிய உதவியாளர்கள் இன்று காலை குறித்த போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

தம்மை நிரந்திர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு கோரி பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

தமது நியாயமான கோரிக்கைகள் இரண்டரை வருடங்களாக எந்த தரப்பினரும் கருத்தில் எடுக்கவில்லை எனவும் தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டமானது தொடர்ந்து முன்னெடுக்க முயன்றால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கல்முனை பிராந்தியத்தினைச் சேர்ந்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.