வாழைச்சேனையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த ஏழு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆறு உழவு இயந்திரங்களும் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை, புணாணை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...