வவுனியாவில் கிலோ 50 ரூபாவிற்கு நெல் கொள்வனவு செய்யும் செயற்றிட்டம் ஆரம்பம்

Report Print Theesan in சமூகம்
79Shares

தேசிய ரீதியில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லினை 50 ரூபாவிற்கு சந்தைப்படுத்தும் கொள்வனவு செய்யும் செயற்றிட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து வவுனியாவில் உள்ள பல்வேறு களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் சுமார் 45,000 ஏக்கரில் நெல் செய்கை பண்ணப்பட்ட நிலையில், இம் முறை அதிகளவில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னி கட்டளைத்தளபதி போபித தர்மசிறி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் ந. கமலதாசன், விவசாய திணைக்களத்தின் அதிகாரி சகிலாபானு, அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள், விவசாய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் விவிசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.