சீனா - வுஹானில் நாங்கள் அனாதரவாக இருக்கின்றோம் - இலங்கை மாணவர்

Report Print Steephen Steephen in சமூகம்

சீனாவில் ஆபத்தான பகுதியாக குறிப்பிடப்படுகின்ற வுஹான் பிரதேசத்தில் உள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சீனாவுக்கான இலங்கை தூதரகம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஹட்டன் நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் கலாநிதி பட்டப்படிப்புக்கான சீனாவின் வுஹானில் தங்கியிருக்கும் பிரகீத் ரொஷன் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் பிரதேசம் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் ஆபத்தான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் பெருமளவில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் எனவும் பல்கலைக்கழக விடுதிகளுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டிருந்த போதிலும் வுஹான் பிரதேசதத்தில் உள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான பிரதேசத்தில் இருக்கும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தன்னுடன் கல்வி கற்கும் 31 மாணவர்கள் விடுதியில் தங்கியிருப்பதாகவும் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் குறைந்த வசதிகளை கொண்ட விடுதியில் தாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் உட்பட வுஹான் பிரதேசத்தில் இருக்கும் இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.