மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Report Print Sumi in சமூகம்

மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்த காந்தி நினைவு தினம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காந்தியின் ஞாபகார்த்தமாக பத்திரிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. காந்தி சிலையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன், வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...