காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

Report Print Theesan in சமூகம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்திருந்தது.

எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம், வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு பேரணியை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் சுகாஸ், மற்றும் ஐந்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...