வீடொன்றில் அழுகிய நிலையில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

மகரகம - நாவின்ன, தேவானந்த மாவத்தையில் அமைத்துள்ள வீடொன்றில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் இறந்திருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இவர்கள் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் நீதவான் விசாரணைகள் நடைபெற்றுள்ளது.