இறக்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

Report Print Mubarak in சமூகம்

இறக்காமம், அம்பாறை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அம்பாறை நோக்கிச் சென்ற கொண்டிருந்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது படுகாயத்திற்குள்ளான இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், இறக்காமம் பிரதேசத்தில் வீதி நடுவில் உள்ள கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடன் அகற்றிவிட வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.