முடிவுக்கு வந்தது கிளிநொச்சி மகாவித்தியாலய மைதானப் பிரச்சினை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியை எதிர்வரும் 11ஆம் திகதி சொந்த மைதானத்தில் நடத்துவதற்கு மாவட்ட செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 2500இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் பாடசாலைக்கென சொந்தமான விளையாட்டு மைதானம் இல்லாது பெரும் சிரமங்களை பாடசாலை சமூகம் எதிர்கொண்டு வந்துள்ளது.

2007ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச செயலகத்தினால் குறித்த பாடசாலையின் விளையாட்டு திறண் விருத்திக்காக 4 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு மிக அருகில் வழங்கப்பட்ட காணியையும் இணைத்து சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் தமது விளையாட்டு திறண்களை வெளிப்படுத்தும் வகையில் கழகங்கள் பயன்படுத்தும் மைதானங்களையு்ம, பாடசாலை முற்றத்தினையும் பயன்படுத்தி வந்தனர்.

பாடசாலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட குறித்த காணியினை மீட்டு தருமாறு பாடசாலை முதல்வர் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பாடசாலை விளையாட்டுப்போட்டியினை நடார்த்துவதற்காக நேற்று மாலை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை விளையாட்டுப்போட்டி இடம்பெறவிருந்த நிலையில் தமது பிள்ளைகளின் விளையாட்டு திறண் விருத்திக்காக பாடசாலைக்கு சொந்தமான காணியை இவ்வாறு அபிவிருத்தி செய்து கொண்டிருந்த போது சர்வதேச விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்துவரும் தரப்பினரால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படிருந்தது.

119 இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இரவு பொலிஸார் குறித்த பணியை இடை நிறுத்துமாறும், பாடசாலை முதல்வர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பெற்றோரையும், முறைப்பாட்டாளர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த காணி விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தீர்மானத்திற்கமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அபிவிருத்தி பணிகளை இடை நிறுத்துமாறும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடன் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். குறித்த காணியில் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு மாவட்ட செயலகம் இன்று அனுமதியை வழங்கியிருந்தது.

நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த குறித்த விளையாட்டுப் போட்டி, மைதான புனரமைப்பிற்கான எதிர்வரும் 11ம் திகதிக்கு பாடசாலை சமூகத்தினரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு பின்னர் சொந்த மைதானத்தில் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் மாணவர்களும், பாடசாலை சமூகமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த விடயத்திற்கு துணையாக இருந்த அனைத்து தரப்பினர்களிற்கும் பாடசாலை சமூகம் நற்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த பாடசாலையின் மைதானம் சீர் செய்யும் செயற்பாடுகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Offers

loading...