உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்றங்களின் முதன்மை அங்கத்தவர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடல் நிகழ்வில் ஆளுநர் அனுராதா யஹம்பத், உள்ளூராட்சி திணைக்கள செயலாளர் U.L.A அஸீஸ், மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் க.சித்திரவேல், தவிசாளர்கள், பிரதிமுதல்வர், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமான இக் கலந்துரையாடலில், மாநகர, நகர, பிரதேச சபைகளின் பதவி வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குதல், தற்காலிகமாக வேலை செய்பவர்களின் நியமனங்களை நிரந்தர நியமனமாக்குதல், முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், நூலகர் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் கழிவு முகாமைத்துவம்-குப்பைகளை கொட்டும் இடங்களுக்கான தேவைகள், அதன் அபிவிருத்தி, வேலைகளுக்கு தேவையான வாகனங்களை கொளவனவு செய்தல், வரி அறவீடு, வீதி அபிவிருத்தி, பொது கட்டிடங்கள், சிறிய பாலங்கள் நிர்மாணித்தல், நிலம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குடிநீர் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல விடயங்ககள் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Latest Offers