பணிப்பெண்களாக வெளிநாடு சென்றுள்ள இலங்கை பெண்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை பெண்களை மத்திய கிழக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தகம் வெளியாகியுள்ளது.

இதில் சுமார் 50 பேர் ஓமனிலும் சிலர் டுபாயிலும் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா பயண விசாக்களில் அனுப்பப்படும் இளம் பெண்களே இந்த வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மூன்று மாத கால சுற்றுலா விசாக்களில் அனுப்பப்படும் இவர்கள் மத்திய கிழக்கில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

எனினும் இதனை வெளியில் கூறமுடியாத நிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


you may like this video