கொரோனா அச்சத்தால் இலங்கையில் புறக்கணிக்கப்படும் சீனர்கள்! அதிகாரிகள் கவலை

Report Print Ajith Ajith in சமூகம்

சீன நாட்டவர்கள் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சில சம்பவங்கள் குறித்து சீன அதிகாரிகள் உத்தியோகபூர்வமற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொது உணவகங்களில் மற்றும் ஏனைய மக்கள் கூடும் இடங்களில் இருந்து அவர்கள் தவிர்க்கப்பட்டமை கவலையளிப்பதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து சீன அதிகாரிகள் அரசாங்கத்தின் விசேட செயலணியை நேற்று சந்தித்த போது தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரச்சினை ஜனாதிபதி செயலகத்துக்கு உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை சீன நாட்டினர் புறக்கணிக்கப்படக்கூடாது என்று சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இதற்கிடையில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


you may like this

Latest Offers

loading...