கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மென்பொருள் ஊடாக விசேட சோதனை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஊடாக, சீனா உட்பட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நாடாளுமன்றத்தின் சுகாதார உப குழுவுக்கு இதனை அறிவித்துள்ளார்.

ஐ.சி.டி.ஏயின் உதவியுடன் இலங்கையின் வைத்தியர்களால் இந்த மென்பொருள் இரண்டு நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இலங்கைக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும், இதன்படி இலங்கைக்கு வரும் பயணிகள் கட்டுநாயக்கவில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பின் அவர்கள் தொடர்பில் தொடர் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோய்தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களிலேயே அதன் அறிகுறிகள் தென்படுவதால் இந்த தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடுகள் யாழ்ப்பாணம் விமான நிலையம், கொழும்பு மற்றும் காலி, திருகோணமலை துறைமுகங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில் அனில் ஜாசிங்கவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார மனித நலன்புரி நாடாளுமன்ற கண்காணிப்புக்குழுவின் செயலாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...