சங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியின் தந்தை உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Report Print Malar in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்கரில்லா ​ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த குண்டுதாரியின் தந்தையான மொஹமட் ஹயாது மொஹமட் ஈப்ராஹிம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கையை ஏற்ற மேலதிக நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...