ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் படுகாயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வீதியை கடக்க முயற்சித்த வேளை மோட்டார்வாகனமொன்று அவருக்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வேகமாக வந்த லொறியொன்று மோட்டார்வாகனத்தின் பின்பக்கத்தில் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்வாகனம் யுவதி மீது மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers