இலங்கைக்கான பின்லாந்து தூதுவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையில் சந்திப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனனிற்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிற்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற இம் மாவட்டத்தினை நான் பார்க்கிறேன் எனவும் அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீனமுறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதி வாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முழுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழுமையான ஒத்துழைப்பினையும் அரசாங்கத்தின் ஊடாக செய்து கொடுப்பதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர் மற்றும் மாவட்ட மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers

loading...