வவுனியா மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கௌரவிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்தின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்றையதினம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சகிலாபாணு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் மரக்கன்று மற்றும் சின்னங்களை வழங்கி வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ண, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராசா மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதி மாகாணப்பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...