போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

Report Print Ajith Ajith in சமூகம்

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு பெப்ரவரி 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மொனராகலை நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் 64 மற்றும் 65 வயதுகளை கொண்ட மொனராகலையை சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் இருவரும் முன்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி லொத்தர் டிக்கட்டுகளை கொள்வனவு செய்தபோதே கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் விசாரணையின்போது இவர்களிடம் இருந்து 100 ரூபா மற்றும் 20 ரூபா போலித்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் நாணயத்தாள் அச்சிடலுக்கு எப்சன் ரக அச்சு பிரதியந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் வீட்டில் உள்ள கணணிகளே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

Latest Offers

loading...