தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட சீன பெண்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட சீன பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கொடையில் உள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 16 பேருக்கு அந்த நோய் பீடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நான்கு வெளிநாட்டவர்களும் நான்கு உள்ளூர் பொது மக்களும் இன்னும் சிகிச்சைப் பெறுகின்றனர்.

இந்த நிலையில் ராகம வைத்தியசாலை, கம்பஹா வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, அநுராதபுரம் வைத்தியசாலை, யாழ்ப்பாண வைத்தியசாலை, குருநாகல் வைத்தியசாலை, ரத்தினபுரி வைத்தியசாலை, மட்டக்களப்பு வைத்தியசாலை, பதுளை வைத்தியசாலை என்பவற்றில் இந்த நோய்க்கான சிகிச்சைகளை பெறமுடியும்.

இதேவேளை 30 ஜனவரி 2020 திகதியின்படி கொரொனா வைரஸ் 18 நாடுகளில் பரவியிருந்தது.

7,818 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 82 பேர் சீனாவை தவிர்ந்த ஏனைய நாடுகளை சேர்ந்தவர்கள்.

170 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.