யாழ்ப்பாணத்திலிருந்து காரில் கஞ்சாவை கடத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 8 கிலோகிராம் கேளரா கஞ்சாவை கடத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்தேகநபர் 8.6 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை காரில் மறைத்து வைத்து யாழிலிருந்து பொலன்னறுவை நோக்கி எடுத்து செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 31 வயதுடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.