ரயில், பேருந்துகளில் பயணிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து!

Report Print Vethu Vethu in சமூகம்
500Shares

இலங்கையில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பிலிருந்து பயணிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் இலங்கையர்களை கடுமையாக தாக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை. எனினும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைப்பது தொடர்பில் அனைத்து பிரிவினரும் அவதானமாக செயற்பட வேண்டும்.

பயணிகள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்துகளில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் ஆபத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்குமாறு அமைச்சர், ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பேருந்து மற்றும் ரயிலில் நெரிசல் இன்றி பயணிகள் பயணிப்பதன் மூலம் இந்த வைரஸ் தொற்றுவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது வரை இலங்கையர்கள் எவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை. எனினும் ஆபத்து வரமுன்னர் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


you may like this video