யாழ்ப்பாணத்திலிருந்து நடைபவனியொன்றை ஆரம்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள்

Report Print Sumi in சமூகம்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாற்றுத்திறனாளிகளால் நடைபவனியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 மாற்றுத்திறனாளிகள் இணைந்து இந்த நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ், முஸ்லிம், சிங்கள இனத்தைச் சேர்ந்த 3 மாற்றுத்திறனாளிகளே இந்த நடைபவனியில் பங்கேற்றுள்ளனர்.

குறித்த நடைபவனியானது இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா ஊடாக இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் சென்று நான்காம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர நிகழ்வினை வந்தடையவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஆறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி, சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி குறித்த நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.