கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை தப்பியதா? வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் சீனப் பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீன பெண் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனப் பெண்ணிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் குணமடைந்துள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் அல்லது அவர் இலங்கையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் வைரஸ் தொற்றியுள்ளதா என சோதனையிடப்பட்டது. எனினும் அவர்கள் பாதிக்கப்படவில்லை என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதல் நோயாளி இவராகும்.

43 வயதான பெண் குறித்த பெண் சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்து சுற்றுலா மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த போதே இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்மணி முழுமையாக காப்பாற்றப்பட்ட நிலையில், இலங்கையில் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.