சீன தொழிலாளர்கள் பணிபுரியும் அபிவிருத்தி திட்டங்களின் வேலைகள் இடைநிறுத்தம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள தேவையற்ற அச்சம் காரணமாக சீன தொழிலாளர்கள் பணிப்புரியும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு உட்பட மேலும் சில அபிவிருத்தித் திட்டங்களின் வேலைகள் நின்று போயுள்ளதாக தெரியவருகிறது.

சீன தொழிலாளர்களுடன் இணைந்து பணிபுரிய இலங்கை தொழிலாளர்கள் விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சீனப் பிரஜைகள் பொருட்களை கொள்வனவு செய்யும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய உள்நாட்டு நுகர்வோர் அஞ்சுவதாக கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக சரியாக அறியாமையினால் பரவி வரும் அச்ச உணர்வு காரணமாக ஏற்கனவே சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.