சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை

Report Print Ajith Ajith in சமூகம்

தியத்தலாவைக்கு அழைத்து வரப்பட்ட சீனாவில் இருந்து வந்த இலங்கை மாணவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் கொரோனா ரைவஸ் தொடர்பான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ மருத்துவ அதிகாரிகளும் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் சீனாவில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 33 பேரையும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் அனுமதித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை மத்தளை விமானநிலையத்தில் இருந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தியத்தலாவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்கள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தியத்தலாவ இராணுவ முகாமின் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்கவைக்கப்படுவர்.

முன்னதாக கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பொதுசுகாதார நிபுணர் வைத்திய கலாநிதி சேமகே இந்த 33 பேரையும் பரிசோதனை செய்து தியத்தலாவ முகாமுக்கு அனுப்பி வைத்தார்.

இதன்போதே எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.