வவுனியாவில் நடமாடும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு விசேட அறிவித்தல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அதிஸ்டலாபச்சீட்டு கூடம், வடை வண்டில் மற்றும் குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் போன்றன, நாளாந்த வாடகையாக 50 ரூபா செலுத்த வேண்டுமென நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான அறிவித்தல் குடியிருப்பு வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களிற்கு முன்பாகவும் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்குறிப்பிட்ட இடங்களில் நாளாந்த வாடகை 50 ரூபா செலுத்த தவறும் பட்சத்தில் மேற்கூறப்பட்ட வியாபார நிலையங்கள் நகர சபையால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடமாடும் வண்டில் வியாபாரம் என நகரசபைக்கு வருடாந்தம் 1270 ரூபா செலுத்தப்பட்டு வருகின்ற இந் நிலையில் தற்போது தினசரி 50 ரூபாவும் பெறுகின்றனர். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வண்டில் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை திறந்த வெளிச்சந்தை குத்தகையாளர் என நகரசபையினரால் நாளாந்த வாடகை 50 ரூபா பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.